Posts

மதுரைக்காஞ்சி - அறிமுகம்

                                                    மதுரைக்காஞ்சி – அறிமுகம் தமிழ் மொழியின் தொன்மை இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து . தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் . தொல்காப்பியம் கி . மு . மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல் [1] . அந்த நூலில் , இருநூறுக்கும் மேலான இடங்களில் , தொல்காப்பியர் , “ என்ப ”, “ மொழிப ”, ” கூறுப ”, “ என்மனார் புலவர் ” என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார் .  இதிலிருந்து , தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது . எள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் எண்ணெய் . அதுபோல் , இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும் . ஆகவே , கி . மு . மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இருந்திருக்க வேண்டும் . அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை . தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள் வடிவத்தில்தான் இருந்தன .   அகத்திணையும் புறத்திணையும் பாடல்களை அகத்திணைப் பாடல்

மதுரைக்காஞ்சி - மூலம்

                                             மதுரைக்காஞ்சி – மூல ம் ஓங்கு திரை வியன் பரப்பின் ஒலி முந்நீர் வரம் பா கத் தேன் தூங்கும் உயர் சிமைய மலை நாறிய வியன் ஞாலத்து வல ம் மாதிரத்தான் வளி கொட்ப                    5   வியல் நாள்மீன் நெறி ஒழுகப் பக ல் செய்யும் செஞ் ஞாயிறும் இரவுச் செய்யும் வெண் திங்களும் மை தீர்ந்து கிளர்ந்து விளங்க மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்கத்        10   தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய நிலனு மரனும் பயன்எதிர்பு நந்த நோய்   இகந்து நோக்கு விளங்க மேதக மிகப் பொலிந்த ஓங்கு நிலை வயக் களிறு                        15 கண்டு தண்டாக் கட்கு இன்பத்து உண்டு தண்டா மிகுவளத்தான் உயர் பூரிம விழுத் தெருவில் பொய் அறியா வாய்மொழியால் புகழ் நிறைந்த நல்மாந்தரொடு                     20 நல் ஊழி அடிப் படரப் பல் வெள்ளம் மீக் கூற உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக ! பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின் நிணம் வாய்ப்பெய்த பேய் மகளிர்                  25 இணை ஒலியிமிழ் துணங்கைச் சீர்ப் பிணை யூபம் எழுந்து ஆட அஞ்சு வந்த போர்க்களத் தான் ஆண் தலை அணங்கு அடுப்பின்