மதுரைக்காஞ்சி - பொருட்சுருக்கம்

 மதுரைக்காஞ்சி – பொருட்சுருக்கம்

பாண்டிய மன்னனின் குடிச்சிறப்பு

இவ்வுலகம் அகன்ற கடலை எல்லையாகவும் தேனடைகள் தொங்கும் உயர்ந்த சிகரங்களக்கொண்ட மலைகளையும் உடையது. இங்கு வலமாக காற்றுச் சுழல, விண்மீன்கள் ஒழுங்காகச் செல்ல, கதிரவனும் திங்களும் குற்றமற்றுத் தோன்றி, வானம் பொய்யாது மழை பெய்தது. மரங்களும் பல்லுயிரும் தழைத்தன. மக்கள் பசியும் பிணியுமின்றி வாழ்ந்தனர். பொய்மொழியாத அமைச்சர்களுடன் பலகாலம் தங்கள் புகழ் நிலைக்குமாறு இவ்வுலகை ஆட்சி செய்த சிறந்த மன்னர்களின் மரபில் தோன்றியவனே! தென்னவன் என்னும் பெயரையுடைய, பகைவர்கள் நெருங்க முடியாத வலிமையுடைய, பழம்பெரும் கடவுளாகிய சிவபெருமானின் வழித்தோன்றலே! பகைவர்களிடமிருந்து நிலங்களைப் பெற்று,  மக்களுக்கு உதவிய, பொன்னால் செய்த மாலையை அணிந்த மார்பினை உடைய, நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் புகழ் பெற்றவனின் வழித்தோன்றலே!

பாண்டியனின் வெற்றிகள்

கடலை அகழியாகக்கொண்ட சாலியூர் என்னும் சிறந்த ஊரைக் கைக்கொண்ட வெற்றியை உடையவனே! நீ வெற்றிபெற்ற நாடுகளில் உள்ள ஊர்களில் விழாக்கள் நடைபெறும்பொழுது, பொருநர்க்கு யானைகளைக் கொடுத்து, பொன்னாற் செய்த தாமரைப் பூவைச் சூட்டி, நல்ல அணிகலன்களையும் கொடுக்கும் வேந்தனே! பல குட்ட நாட்டு அரசர்களை வென்ற பாண்டிய மன்னனே!

சிறந்த யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை ஆகிய நால்வகைப்படையோடும் சென்று, தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் சேரனையும் சோழனையும் பல குறுநில மன்னர்களையும் வென்றும் அமையாமல், மலைகளைக் கடந்து, காடுகளைப் பிளந்து, பகைவர்களை அழித்த வலிமையுடையவனே!

செல்வம் மிகுந்த முதுவெள்ளிலை மற்றும் முத்துக் குளிப்பவர்கள் வாழும் கொற்கை ஆகிய ஊர்களில் வாழும் மக்கள் உன்னைப் புகழ்கிறார்கள்; உன் ஏவல் கேட்கிறார்கள்.  கிடைத்தற்கரிய பொருள்களை எல்லாம் தன்வசம் கொள்ளாமல் பிறர்க்கு அளித்து, பனி ஒழுகும் சிகரங்களுடைய மலைகள் உள்ள காடுகளைக் கடந்து, பகைவர்களுடைய நாட்டுக்குள் புகுந்து அவர்களுடைய அரண்களைக் கைப்பற்றி, அங்கே பல ஆண்டுகள் தங்கியிருந்து, அந்த நாட்டு மக்களோடு கலந்து, அவர்களின் நாடும் அங்குள்ள மக்களும் மேம்படுமாறு போர்செய்த தலைவனே!

பாண்டியனின் போரால் பகைவர்களின் நாடு பாழ்பட்ட நிலையும் ஆட்சித் திறமையும்

நீ போரிடும்பொழுது, உன் பகைவர்களின் காவற்காடுகளை அழித்தாய்; மருதநிலங்களை எரித்தாய்; ஊராக இருந்த இடங்கள் பாழாயின; வளமான ஊர்களில் இருந்த மக்கள் பல வகையிலும் துன்பப்பட்டு உறவினரின் பாதுகாப்பில் சென்று சேர்ந்தனர். அங்கிருந்த விளைநிலங்களில் பன்றிகள் ஓடித்திரிந்தன. வாழ வழியில்லாமல் உன் பகைவர்களின் நாடுகளெல்லாம் பாழாயின. அப்பகைவர்களின் அரண்களைக் கைப்பற்றி, அந்தப் பகைவர்களுக்கு உதவும் சுற்றதார்களும் பகைவர்களும் உன் சொல் கேட்டு உன்வழி நடக்கிறார்கள். அவர்களின் நாடுகளை முற்றிலும் உனதாக வளைத்துக்கொண்டு, அரசியல் நெறிமுறை பிறழாமல் அறவழியைக் காட்டி, பெரியோர்கள் சொல்லிச் சென்ற வழியிலிருந்து விலகாமல், நீ சிறப்பாக ஆட்சி புரிகிறாய். உன்னைப்போல், வீரத்தில் சிறந்து விளங்கி, வலிமையான படையுடன் சென்று, பகைவர்களின் நாடுகளை அழித்து, வெற்றியோடும் புகழோடும் இவ்வுலகில் சிறப்பாக வாழ்ந்த மன்னர்கள் பலர் இருதிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே இறந்துபோயிருக்கிறார்கள்.

வளம் நிறைந்த ஐவகை நிலங்களுக்கும் நடுவில் மதுரை மாநகரம்

மருத நிலம்: பாண்டிய நாடு நீர்வளமும் நிலவளமும் உள்ள செழுமையான மருத நிலங்களங்களை உடைய நாடு. அங்கு யானைகள் நின்றால் மறைக்கும் அளவுக்குப் பயிர்கள் வளர்ந்திருக்கும்; பொய்கைகளிலும் மடுக்களிலும் பலவகையான மலர்கள் மலர்ந்திருக்கும்; மீனவர்கள் மீன்களைக் கொன்றுகுவிக்கும் ஓசை ஒரு பக்கமும், கரும்பைச் சாறு பிழியும் கரும்பாலைகளின் ஓசை ஒரு பக்கமும் கேட்கும். மற்றொரு பக்கம், களை பறிப்போரின் ஓசையும், கள்ளை உண்டு களித்திருக்கும் உழவர்களின் ஓசையும், நெல்லை அறுவடை செய்பவர்களின் ஓசையும்; கணவரோடு கூடி நீராடும் மகளிரின் ஆராவாரமும் கேட்கும்.

முல்லை நிலம்: பாண்டிய நாட்டு முல்லை நிலங்களில், எள்ளின் இளங்காய்களும், வரகின் கதிர்களும் முற்றி இருக்கும்; அங்கு, பெண்மான்களும் ஆண்மான்களும் ஓடித் திரியும்; முசுண்டைப் பூக்களும்,முல்லைப் பூக்களும் நெய்தல் பூக்களும் பரவிக் கிடக்கும். இத்தகைய பயிர்களும் மலர்களும் நிறந்து முல்லைக்காடுகள் காட்சியளிக்கும்.

குறிஞ்சி நிலம்: அகில் மற்றும் சந்தன மரங்களை வெட்டி, மேட்டு நிலத்தில் விதைத்த நெல்லும், வெண்சிறுகடுகுச் செடியும், ஐவனம் என்னும் வெண்மையான நெல்லோடு பின்னிப் பிணைந்து வளர்ந்திருக்கும்.  இஞ்சியும் மஞ்சளும் பச்சை மிளகும் பிறவும், பலவகையான பண்டங்களும் கற்றரையில் குவிக்கப்பட்டிருக்கும். அவரையின்  தளிரைத் தின்னும்  காட்டுப்பசுக்களை விரட்டுபவர்களின் ஆரவாரமும், மலையில் வாழும் குறவன் தோண்டிய பொய்க்குழிகளில் வீழ்ந்த ஆண்பன்றியைக் கொன்ற ஆரவாரமும்,  வேங்கை மரங்களின் பெரிய கிளைகளில் உள்ள பூக்களைப் பறிக்கும் பெண்களின் ஆரவாரமும்,  பன்றிகளைக் கொல்லும் புலியின் ஆரவாரத்தோடு கூடிய எல்லா ஆரவாரமும் நிறைந்த குறிஞ்சி நிலம் ஒரு பக்கம் இருக்கும்.

பாலை நிலம்: மூங்கிலின் புதரை நெருப்பு சுட்டெரித்ததால், யானைகள் தமது மேய்ச்சலுக்கு வேறு இடங்களைத் தேடிப்போகும். தட்டைகள் அழகு இழந்து காணப்படும். புல் உலர்ந்த காட்டில், சூறாவளிக் காற்று குகைகளிலும் மலைப்பிளவுகளிலும் புகுந்து, கடல்போல் ஒலிக்கும். பல வழிகள் கூடுமிடத்தில் இளைஞர்கள் வில்லையுடைய கையோடு காவல் காப்பர்.  நிழல் இல்லாமல் இருப்பதற்குக் காரணமான முதுவேனிற் காலத்தையும்  மலைகளையும் உடைய, பிரிவை உரிப்பொருளாகக்கொண்ட பாலை நிலம் ஒரு பக்கம் இருக்கும்.

நெய்தல் நிலம்: பாண்டிய நாட்டில், கடலில் பிறந்த முத்துகள், அரத்தால் கீறியறுக்கப்பட்டு சிறப்புடையனவாக விளங்கும் வளையல்கள், நெய்தல்நில மக்கள் படகில் கொண்டவந்த பல் வேறான பண்டங்கள், உப்பை வெல்லக்கட்டியோடு சேர்த்துப் பொரித்த இனிக்கும் புளி முதலியவற்றை, மரக்கலங்களில் வந்த வேற்றுநாட்டவர் தாங்கள் கொண்டுவந்த குதிரைகளுக்கு விலையாகப் பெற்றுக்கொண்டு ஏற்றிச் செல்வார்கள். இவ்வாறு நாள்தோறும் பாண்டிய நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதியாவதும், வெளிநாட்டுப் பொருள்கள் இறக்குமதியாவதும் இங்கே தொடர்ந்து நடைபெறும். இத்தகைய வளம் பலவும் நிறைந்த நெய்தல் நிலம் ஒரு பக்கம் இருக்கும்.

இவ்வாறு, பாண்டிய நாட்டில் ஐந்துவகை நிலங்களும் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை,) அழகுடன் அமைந்திருக்கும். அங்கு, விழாக்கள் நடைபெறும் அகன்ற தெருக்களில், துணங்கைக் கூத்து ஆடுவோரும், அழகிய குரவைக் கூத்து ஆடுவோரும் வாழும்  சேரியும், புதுவருவாய் உடையோர் வாழும்  குடியிருப்புகளும் அமைந்திருக்கும்.  இத்தகைய சிறப்புடைய வளம் பல பெற்ற நல்ல நாட்டிற்கு நடுவில் பொய்கைகளும் சோலைகளும் பூந்தோட்டங்களும் சூழ்ந்த அழகிய வைகை நதியின் கரையில் மதுரை நகரம் உள்ளது.

மதுரை நகரில் அகழிகளும், மதில்களும், மாடங்களும்

தங்கள் வளமான நாடுகளையும் செழிப்பான குடியிருப்புகளையும் இழந்த பகைவர்கள் தங்கள் படையோடு போரிட வந்தபொழுது அவர்களின் மாறுபாட்டை நீக்கி அவர்கள் புறமுதுகிட்டு ஓடச் செய்யும்படி மிக ஆழமான அகழியும், விண்ணைத் தொடுமளவுக்கு உயர்ந்த அடுக்குகளுடன் கூடிய மதிலும் மதுரை நகரில் இருக்கும். அந்த மதிலில் வலிமையான கதவும் மலைபோல உயர்ந்த மாடங்களும் உள்ளன. அங்குள்ள வாயில் வழியாக மக்களின் போக்குவரத்து இடையறாது நீரோடும் வைகை ஆற்றைப்போல இருக்கும்.

மதுரை நகரில் ஆரவாரங்களும் கொடிகளும்

அந்த வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், அகன்ற தெருக்களும் அவற்றின் இருபுறங்களிலும் பல சாளரங்கள் அமைந்த வீடுகள் உயர்ந்து தோன்றும். அங்கு நாளங்காடி அல்லங்காடி ஆகிய இருதெருக்கள் இருக்கும். அந்தக் கடைத்தெருவில் பலமொழிகள் பேசும் மக்களின் ஆரவாரம் எழும். ஒருபக்கம் முரசை முழக்கி மக்களுக்குத் திருவிழாவை அறிவிக்கும் ஒலியும், மற்றொரு பக்கம் இசைக்கருவிகள் முழங்கக்கேட்டுக் களித்து ஆடுபவர்களின் ஆரவாரமும் இருக்கும். கோவில்களில் விழாக்கள் நடத்துவதைக் குறித்த கொடிகளும், படைத்தலைவர் பெற்ற வெற்றிக்காக உயர்த்திய வெற்றிக் கொடிகளும், கள்விற்கும் கடைகளில் களிப்பின் மிகுதியை வெளிப்படுத்தும் கொடிகளும் கடைத்தெருவில் அசைந்துகொண்டிருக்கும்.

மதுரையில் பகலில் நடைபெறும் நிகழ்வுகள்

மதுரை மாநகரத்தின் கடைத்தெருக்களில், யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை மற்றும் காலாட்படை ஆகிய நால்வகைப்படைகளும் வந்துபோவதைக் கண்டு, உணவுப் பண்டங்கள், பூக்கள், சுண்ணம், சுண்னாம்புடன் கலந்த வெற்றிலை, பாக்கு முதலியவற்றைத் தங்கள் கைகளில் ஏந்தி விற்பவர்கள் தங்கள் உயிருக்கு அஞ்சி ஏங்குவர். அந்தப் படைகள் சென்ற பிறகு மாளிகைகளின் குளிர்ந்த நிழலில் இருந்து அவர்கள் இளைப்பாறுவர்.

கடைத்தெருவில், அழகிய மூத்த பெண்டிர் பொருட்களை விற்பர். சிவந்த நிறமுடைய சில பெண்களும், கருமை நிறமுடைய சில பெண்களும் அங்கு இருப்பர். சில பெண்கள் இளைஞரோடு புணர்வதற்காகத் தம்மை அலங்கரித்துக்கொண்டு பல கிண்ணங்களில், அவர்கள் விரும்பும் பண்டங்களை நறுமணம் கமழும் மலர்களோடு ஏந்திச்சென்று வீடுகள் தோறும் உலாவுவார்கள். அங்குள்ள நாளங்காடியில், வாங்குவோர் வந்து எடுக்க எடுக்கக் குறையாது, வணிகர் மேன்மேலும் பொருள்களைக் கொண்டுவரக் கொண்டுவர பொருள்கள் குறையாமல் இருக்கும்.

மதுரை நகரில், மாலை வேளையில், பூவேலைப்பாடுகள் அமைந்த ஆடையை அணிந்து அத்தோடு வாளையும் சேர்த்துக்கட்டி, கால்களில் கழல் அணிந்து, ஒப்புயர்வற்ற வேப்பம்பூ மாலையை அணிந்து, காலாட்படை வீரர்கள் சூழ்ந்து காக்க, விரைவாகச் செல்லும் குதிரைகள் பூட்டிய தேரில், விழா காண்பதற்கு செல்வந்தர்கள் செல்வர். பொன்னாலான அணிகலன்களையும்  பூவாலான வளையல்களையும் அணிந்து, தெருவெல்லாம் நறுமணம் கமழ, வானுலகத்திலிருந்து இறங்கி வந்ததைப் போன்ற தெய்வ மகளிரின் அழகிய முகம், கம்பங்களில் கட்டப்பட்ட பெரிய கொடிகள் காற்றில் அசைவதால், வரிசையாக உள்ள  மாடங்களின் நிலா முற்றங்கள் தோறும், மேகங்களில் மறையும் திங்களைப் போல் தோன்றித்தோன்றி மறையும்.

சிவபெருமானுக்கும் மற்ற தெய்வங்களுக்கும் இசைக்கருவிகளின் ஒலியோடு பலிகொடுக்கும் இடங்கள் ஒரு பக்கம் இருக்கும். புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தோடு, பூவும் புகையும் கொண்டு சென்று, தங்கள் கடவுளை வழிபடும் புத்தப் பள்ளிகள் ஒரு பக்கம் இருக்கும்.  சிறந்த வேதங்களைத் திருத்தமாக ஓதி, சிறந்த ஒழுக்கங்களை மேற்கொண்டு, இந்த நிலவுலகில், தம்மை உணர்ந்து வாழும் அந்தணர்களின் இருப்பிடம் ஒரு பக்கம் இருக்கும். மற்றொரு பக்கம் சமணப் பள்ளிகளும், நடுவுநிலைமையோடு இயங்கும் அறங்கூறவையமும், நாற்பெருங்குழுவினர் வாழும் இடங்களும் இருக்கும். புகழ்பெற்ற காவிதி என்ற பட்டம் பெற்ற அமைச்சர்களின் இல்லங்களும், அறத்திலிருந்து வழுவாது வாழும் மக்கள் வாழும் இல்லங்களும் அங்கு இருக்கும். அத்தகைய சிறந்த பல நல்ல இல்லங்களிலிருந்து பலவகைப் பொருட்களையும்  வாங்கிக்கொண்டு, சிறந்த அயல் நாட்டுப் பண்டங்களை விற்கவும் வாங்கவும் வருவோரின் கூட்டத்தின் ஆரவாரமும் இருக்கும்.

அந்திக் கடைகளில் ஆரவாரம்

சங்குகளை அறுத்து வளையல் முதலியன செய்வோரும், மணிகளில் துளையிடுவோரும், பொன்னாலான அணிகலன்களைச் செய்வோரும், அதன் மாற்றைக் காண்போரும், செம்பை வாங்குபவர்களும், பூக்களையும் சாந்தையும் விற்பவர்களும், ஒவியர்களும், நெசவாளர்களும் பிறரும் மதுரையில் உள்ள அந்திக் கடைகளில் நெருங்கி நிற்பர். பலவகையான பழங்கள், காய்கள், கீரைகள், கிழங்குகள் ஆகியவற்றையும், இறைச்சி கலந்த சோற்றையும், இனிய சோற்றையும் பரிமாறுவோர் கொண்டுவந்து பிறர்க்குக் கொடுத்து உண்ணச் செய்வதால் எழுந்த ஆரவாரம் அந்திக் கடைகளில் நிறைந்திருக்கும். பிறநாட்டு வணிகர் இங்குச் செய்த அணிகலன்களை வாங்கும் இடங்களிலும் மிகுந்த ஆரவாரம் இருக்கும்.

முதல் யாமத்தில் குலமகளிர் செயல்களும் பரத்தையரின் செயல்களும்

இராக்காலம் வருவதை விரும்பிய மகளிர் தம் துணைவரைக் கூடும் பொருட்டு, தங்களைப் பல வகைகளிலும் அலங்கரித்துக்கொண்டு தம் கணவரின் வருகைக்காகக் காத்திருப்பர். தம் கணவர் வந்தவுடன், அவர்கள் இனிய குரலில் பாடுவார்கள்; அவர்களைத் தழுவிகொள்வார்கள்.

மணமுள்ள பூக்களைச் சூடி, அணிகலன்களை அணிந்து, தங்களைச் சிறப்பாக ஒப்பனை செய்துகொண்டு, இளைஞர்களைக் கவர்ந்து அவர்களோடு கூடி இன்பம் அனுபவித்து, அவர்களின் செல்வத்தைக் கவர்ந்துகொண்ட பிறகு பரத்தையர் அவர்களைவிட்டு விலகுவார்கள். தம்மோடு உறவுகொள்ள விரும்புபவர்களைத் தேடிப் பரத்தையர்கள் செல்வார்கள். பரத்தையர் ஆழமான நீர்த்துறையில் நீராடி, குவளை மலர்களாலான மாலையச் சூடிக்கொண்டு பொய்தல் என்னும் விளையாட்டை விளையாடுவர்.

ஓணத் திருவிழா நடைபெறும் நாட்களில், முதல் யாமத்தில், யானைகளைப் போரிடச் செய்து, அந்தப் போர் நடக்கும்பொழுது வீரர்கள் கள்ளுண்டு களிப்பர். அந்த ஓண நன்னாளில், அண்மையில் குழந்தைகளைப் பெற்ற மகளிர் தங்கள் ஈன்றணிமை தீரச், சுற்றத்தாரோடு நீராடி, இறைவனை வழிபடுவர். முதல்முதலாகக் கருவுற்ற பெண்கள், குழந்தைகளைப் பெற்ற மகளிரைப் பார்த்து, அவர்களைப் போல் தாமும் இறைவனைத் தொழுவர்.

முதல் யாமத்தில், பூசாரிகள் வெறியாட்டம் நடத்துவர். அப்பொழுது முருகனை வழிபட்டு. மகளிர் குரவைக் கூத்து ஆடுவர். குடியிருப்புகள்தோறும் கதையும், ஆடலும் பாடலுமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்பொழுது ஆரவாரம் மிகுதியாக இருக்கும். இத்தகைய ஆரவாரத்தோடு  முதல் யாமம் முடிவடையும்.

இரண்டாம் யாமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

ஆரவாரம் மிகுந்த முதல் யாமம் முடிந்த பிறகு, ஒலிக்கும் சங்குகளின் ஓசை அடங்கும்; வணிகர்கள் தங்கள் கடைகளை மூடுவர்; மகளிர் உறங்கப் போவர். அடையும், கொழுக்கட்டையும் அப்பமும் விற்கும் வணிகர்கள் தூங்கப் போவர். விழாக்காலங்களில் வந்து கூத்தாடும் கூத்தர்களும் உறங்கப் போவர், இவ்வாறு இரண்டாம் யாமத்தில் அனைவரும் உறங்குவர்.

மூன்றாம் யாமத்தில் நடைபெறும் நிகழ்வுகள்

பேய்களும், வருத்தும் தெய்வங்களும், கழுகுகளும் சுற்றித் திரியும் இரவு நேரத்தில், அரிய பொருட்களைத் திருடும் எண்ணத்தோடு கள்வர்கள் மறைந்திருக்கும் இடங்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களைத் தடுத்து நிறுத்தும் வலிமையும் அதற்கேற்ற அறிவும் பெற்ற ஊர்க்காவலர்கள், தெருக்களில் எல்லாம் இடைவிடாமல் மழைபெய்தாலும், உலாவிக் காவல் புரிவதால் மக்கள் அச்சமின்றி உறக்கம் கொள்வர்.

நான்காம் யாமத்தில் (வைகறையில்) நடைபெறும் நிகழ்வுகள்

நான்காம் யாமத்தில், அந்தணர் வேதத்தைப் பாடுவர். யாழ் வாசிப்பவர்கள் மருதப் பண்ணை இசைப்பர். பாகர்கள் களிறுக்குக் கவளம் ஊட்டுவர். குதிரைகள் புல்லை மெதுவாக அசைபோட்டு மென்று தின்னும்.  பல்வேறு பண்டங்களை விற்பவர்கள் தங்கள் கடைகளைக் கூட்டி மெழுகுவர். கள் விற்போர் களிப்பைத் தரும் கள்ளிற்கு விலை கூறுவர். தம் கணவரைக் கூடித் தழுவிப் படுத்திருந்த மகளிர், பொழுது புலர்ந்து விடியற் காலம் வந்ததை உணர்ந்து, தாம் செய்ய வேண்டிய வேலைகளை நினைத்து எழுந்து வந்து, இல்லங்களின் கதவுகளைத் திறப்பதால் அக்கதவுகள் ஒலிக்கும்.  

முந்தின இரவில் கள்ளை உண்டவர்கள், அந்தக் கள்ளால் வந்த களிப்பைத் தடுத்துக்கொண்டு, குழறும் சொற்களைக் கூறுவர். நின்று அரசனைப் புகழ்வோர்  நின்று வாழ்த்துவர்.   உட்கார்ந்து வாழ்த்துவோர் உட்கார்ந்து அரசனின் புகழைக் கூறுவர். நாழிகைக் கணக்கர்கள் நாழிகை அறிவிப்பர்.  முரசு ஒலிக்கும். ஏறுகள் (தம்முள்)மாறுபட்டு முழங்கும். புள்ளிகள் உள்ள சிறகுகளையுடைய சேவற்கோழி விடியற்காலத்தை அறிந்து கூவும். யானையின் குரல்போலக் கூவும் வண்டாங்குருகு எனும் நாரையின் சேவல்களோடு, அன்னச்சேவல்களும் தம் பேடைகளை அழைக்கும். அழகிய மயில்கள் கூவும். பெண்யானைகளைக் கூடிய பெரிய ஆண்யானைகள் முழங்கும்.

மகளிர் தம் கள் உண்ட கணவரோடு ஊடியதால் அறுத்து எறிந்த முத்துமாலையிலிருந்து வீழ்ந்த முத்துகளோடு, மற்ற அணிகலன்கள் பொன்னை உருக்குகின்ற நெருப்புத் துண்டுகள் நிலத்தில் சிந்தியதுபோல், மற்ற மரங்களிலிருந்து வீழ்ந்த காய்களும் மெமையான இளம்பாக்குக் காய்களும் பிறவும் விழுந்து கிடக்கும் மணலையுடைய முற்றத்தில் வண்டுகளும் தேனீக்களும் ஆரவாரிக்கும்.  அவற்றறோடு மெல்லிய பூவின் வாடல்களையும் நல்ல அணிகலன்களையும் பெண்கள் கூட்டித்தள்ள, இரவுப்பொழுது கழிந்து, விடியற் காலைப்பொழுது எல்லார்க்கும் காவலாக மலர்ந்தது.

இரவில் மன்னன் உறங்குவதும் உறங்கி விழிப்பதும்

பல நல்ல அணிகலன்களை அணிந்து, மயிலைப் போன்ற மென்மையையும்,  மாமரத்தின் தளிரினது அழகை ஒத்த நிறத்தினையும்தளிரினது புறத்தில் உள்ள நரம்புகளைப் போன்ற தேமலையும், கூரிய பற்களையும், ஒளிவிடும் மகரக்குழை பொருந்திய வளைந்து தாழ்ந்த காதினையும், தாமரை போன்ற ளியுடைய முகத்தினையும் உடைய மகளிருடைய  தோளைத் தழுவி, பூமாலைகள் புனைந்த படுக்கையில் உறங்கி, புகழ்ந்து பாடுவோர் இசை பாடியதால் மன்னன் துயில் நீங்கி எழுந்து காலைக்கடன்களை முடிப்பான். துயில் நீங்கி எழுந்த மன்னன், மார்பில் சந்தனத்தைப் பூசி, முத்துமாலையும் பூமாலையும் அணிந்து, கையில் வீரவளையலும், விரல்களில் மோதிரமும் அணிந்து, கஞ்சி இட்ட ஆடையை உடுத்தி, உடைக்கு மேலணியும் அணிகலன்களை அணிந்து, மன்னன் கொலுமண்டபத்தில் வீற்றிருப்பான்.  

வீரர் முதலியோர்க்குக் கொடையும் விருந்தும்

வீரர்களையும், பகைவர்படைக்கு நடுவேசென்று பெரிய யானைகளைப் போர்க்களத்தே வெட்டி வீழ்த்தியதால் விழுப்புண்பட்டு விழுந்த தலைவர்களையும், உன் வெற்றிக்காக பெருமுயற்சி செய்தவர்களையும், பாணர்களையும், பாணினியர்களையும் வாசல் திறந்துவைத்து வரவேற்கும் மன்னா! அவர்களுக்கும் அவர்களுடைய சுற்றத்தாருக்கும் தேர்களையும் யானைகளையும் நீ குறையாது வழங்கினாய்; விருந்தளித்தாய்!

மன்னனை வாழ்த்துதல்

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போல், நல்ல வேள்வித்துறைகளில் நீ முற்றும் தேர்வாயாக! தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்களுடன் சேர்ந்து பழகி, அவர்கள் கூட்டுறவாலே பெற்ற அறிவால் வந்த புகழால், நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போல், வியப்பும்,  மேன்மையும், நடுநிலைமையும்  உடைய சான்றோர் பலராலும் புகழப்பட்டு, நீ குற்றமற்ற சிறப்போடு தோன்றுவாயாக! அரிய பொருட்களைக் கொண்டுவந்து தந்து, குடிமக்களின் குறைகளை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, பெரிய நூற்களைக் கற்று, உன் புகழைப் பலரறியச்செய்து, கடல் நடுவே தோன்றும் ஞாயிறு போலவும், பல விண்மீன்களுக்கு நடுவே தோன்றும் திங்கள் போலவும், பொலிவுபெற்ற சுற்றத்தாரோடு நீ இனிதாக விளங்குவாயாக! புகழ்பெற்ற பழையனைத் தலைவனாகக்கொண்டு பகைவர்களை வெல்லும் கோசர் உன் ஏவல் கேட்டு நடக்க, ஐம்பெருங்குழுவினரும் பிறரும் நிறைந்த அவை உன் அறத்தின் தன்மையைப் புகழ்ந்து வாழ்த்துவார்களாக! விளங்குகின்ற அணிகலன்களை அணிந்த மகளிர், பொன்னாற் செய்த வட்டில்களில் கொண்டுவந்து கொடுக்கும் மணமுள்ள மதுரைக்காஞ்சி – பொருட்சுருக்கம்

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போல், நல்ல வேள்வித்துறைகளில் நீ முற்றும் தேர்வாயாக! தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்களுடன் சேர்ந்து பழகி, அவர்கள் கூட்டுறவாலே பெற்ற அறிவால் வந்த புகழால், நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போல், வியப்பும்,  மேன்மையும், நடுநிலைமையும்  உடைய சான்றோர் பலராலும் புகழப்பட்டு, நீ குற்றமற்ற சிறப்போடு தோன்றுவாயாக! அரிய பொருட்களைக் கொண்டுவந்து தந்து, குடிமக்களின் குறைகளை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, பெரிய நூற்களைக் கற்று, உன் புகழைப் பலரறியச்செய்து, கடல் நடுவே தோன்றும் ஞாயிறு போலவும், பல விண்மீன்களுக்கு நடுவே தோன்றும் திங்கள் போலவும், பொலிவுபெற்ற சுற்றத்தாரோடு நீ இனிதாக விளங்குவாயாக! புகழ்பெற்ற பழையனைத் தலைவனாகக்கொண்டு பகைவர்களை வெல்லும் கோசர் உன் ஏவல் கேட்டு நடக்க, ஐம்பெருங்குழுவினரும் பிறரும் நிறைந்த அவை உன் அறத்தின் தன்மையைப் புகழ்ந்து வாழ்த்துவார்களாக! விளங்குகின்ற அணிகலன்களை அணிந்த மகளிர், பொன்னாற் செய்த வட்டில்களில் கொண்டுவந்து கொடுக்கும் மணமுள்ளமதுரைக்காஞ்சி – பொருட்சுருக்கம்

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போல், நல்ல வேள்வித்துறைகளில் நீ முற்றும் தேர்வாயாக! தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்களுடன் சேர்ந்து பழகி, அவர்கள் கூட்டுறவாலே பெற்ற அறிவால் வந்த புகழால், நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போல், வியப்பும்,  மேன்மையும், நடுநிலைமையும்  உடைய சான்றோர் பலராலும் புகழப்பட்டு, நீ குற்றமற்ற சிறப்போடு தோன்றுவாயாக! அரிய பொருட்களைக் கொண்டுவந்து தந்து, குடிமக்களின் குறைகளை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, பெரிய நூற்களைக் கற்று, உன் புகழைப் பலரறியச்செய்து, கடல் நடுவே தோன்றும் ஞாயிறு போலவும், பல விண்மீன்களுக்கு நடுவே தோன்றும் திங்கள் போலவும், பொலிவுபெற்ற சுற்றத்தாரோடு நீ இனிதாக விளங்குவாயாக! புகழ்பெற்ற பழையனைத் தலைவனாகக்கொண்டு பகைவர்களை வெல்லும் கோசர் உன் ஏவல் கேட்டு நடக்க, ஐம்பெருங்குழுவினரும் பிறரும் நிறைந்த அவை உன் அறத்தின் தன்மையைப் புகழ்ந்து வாழ்த்துவார்களாக! விளங்குகின்ற அணிகலன்களை அணிந்த மகளிர், பொன்னாற் செய்த வட்டில்களில் கொண்டுவந்து கொடுக்கும் மணமுள்ள தேறலை  நாளும் பருகி, ஊழ் உனக்குக் கொடுத்துள்ள வாழ்நாட்கள் முழுதும் நீ மகிழ்ச்சியாக வாழ்வாயாக! 

Comments

Post a Comment

Popular posts from this blog

மதுரைக்காஞ்சி - அறிமுகம்

மதுரைக்காஞ்சி - மூலம்